இஸ்ரேலில் இரு பெண் IDF வீரர்களை துரத்திய ஆண்கள் – 28 பேர் கைது!
இஸ்ரேலின் டெல் அவிவின் கிழக்கே உள்ள பினீ பிராக் (Bnei Brak) தெருக்களில் இரண்டு பெண் ஐ.டி.எஃப் ( IDF) வீரர்களை தீவிர ஆர்த்தடாக்ஸ் ஆண்கள் துரத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சம்பவம் தொடர்பில் 28 பேரை இஸ்ரேலிய பொலிஸார் கைது செய்துள்ளனர். அவர்களில் பெரும்பாலானவர்கள் பின்னர் விடுவிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இருப்பினும் இரண்டு சந்தேக நபர்களை ஐந்து நாட்கள் வீட்டுக் காவலில் வைக்க உத்தரவிடப்பட்டதாக வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.
இஸ்ரேலில் கட்டாய இராணுவ சேவை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள நிலையில், கலவரங்கள் வெடித்துள்ளன.
இதன் விளைவாக ஒரு பொலிஸ் ரோந்து கார் சேதப்படுத்தப்பட்டதாகவும், 05 அதிகாரிகள் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.





