உலகம்

வங்கதேசத்தில் புதிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவியேற்பு!

வங்கதேச தேசியவாதக் கட்சியின் (BNP) தலைவர் தாரிக் ரஹ்மான் (Tarique Rahman) மற்றும் அவரது கட்சியைச் சேர்ந்த பிற சட்டமன்ற உறுப்பினர்கள்  இன்று (17) காலை பதவியேற்றனர்.

தலைநகரில் உள்ள வங்காளதேச தேசிய நாடாளுமன்றக் கட்டிடத்தின் பதவியேற்பு அறையில் நாட்டின் தலைமைத் தேர்தல் ஆணையர் ஏ.எம்.எம். நசீர் உதீன் (Nasir Uddin) முன்னிலையில் அவர்கள் பதவியேற்றுள்ளனர்.

அவர்களைத் தவிர, தேர்ந்தெடுக்கப்பட்ட சுயாதீன சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் பிற கட்சிகளில் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களும் இன்றைய தினம் பதவியேற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பிப்ரவரி 12 ஆம் திகதி இடம்பெற்ற நாடாளுமன்ற தேர்தலில், BNP கட்சி, 297 இடங்களில் 209 இடங்களை கைப்பற்றி பெரும்பான்மையுடன் ஆட்சியமைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்
error: Content is protected !!