ஈரான் மற்றும் அமெரிக்காவிற்கு இடையிலான அணுசக்தி பேச்சுவார்த்தை இன்று!
ஈரான் மற்றும் அமெரிக்காவிற்கு இடையிலான அணுசக்தி ஒப்பந்தம் குறித்த இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தைகள் இன்று ஜெனீவாவில் நடைபெறவுள்ளது.
தெஹ்ரான் ஒரு ஒப்பந்தம் செய்ய விரும்புவதாக ட்ரம்ப் கூறியுள்ளார். “நான் மறைமுகமாக அந்தப் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவேன். அவை மிகவும் முக்கியமானதாக இருக்கும்” என்று அவர் மேலும் கூறியுள்ளார்.
இதற்கிடையே தெஹ்ரான் பேச்சுவார்த்தைக்கு உடன்படவில்லை என்றால் மத்திய கிழக்கிற்கு இரண்டாவது விமானம் தாங்கி கப்பல் ஒன்று அனுப்பப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளமையும் சுட்டிக்காட்டத்தக்கது.





