இலங்கை செய்தி

” அநுரவின் அழைப்பின் பின்னரே விளையாடும் முடிவை எடுத்தது பாகிஸ்தான்”

“பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் இலங்கை வருகையானது , இலங்கைக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான நீண்டகால நட்புறவை மேலும் வலுப்படுத்தும்.”

இவ்வாறு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க வலியுறுத்தினார்.

பாகிஸ்தானின் உள்துறை மற்றும் போதைப்பொருள் கட்டுப்பாட்டு அமைச்சர் Syed Mohsin Raza Naqvi, மற்றும் மனிதவள அபிவிருத்திக்கான அமைச்சர் chaudhry Salik Hussain ஆகியோர் உள்ளிட்ட தூதுக்குழுவுடனான சந்திப்பு இன்று (16) நடைபெற்றது.

ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற மேற்படி சந்திப்பின்போதே அநுரகமார திஸாநாயக்க மேற்கண்டவாறு கூறினார்.

இலங்கையின் கோரிக்கையை ஏற்று, பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் வருகைக்குத் தேவையான ஏற்பாடுகளைச் செய்ததற்காக பாகிஸ்தான் பிரதமருக்கு ஜனாதிபதி தனது நன்றியைத் தெரிவித்தார்.

டித்வா சூறாவளி உட்பட இலங்கை மக்கள் சிரமங்களை எதிர்கொண்ட போதெல்லாம் பாகிஸ்தான் இலங்கைக்கு அளித்த மனமார்ந்த ஆதரவை ஜனாதிபதி இதன்போது நன்றியுடன் பாராட்டினார்.

பாகிஸ்தான் பிரதமருக்கும், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கும் இடையேயான தொலைபேசி உரையாடலின் பின்னரே, போட்டியில் விளையாட பாகிஸ்தான் கிரிக்கெட் அணி முடிவு செய்ததாக இதன்போது அமைச்சர் Syed Mohsin Raza Naqvi தெரிவித்தார்.

அதற்காக பாகிஸ்தான் பிரதமர் சார்பாக ஜனாதிபதிக்கு தனது நன்றியைத் தெரிவித்தார்.

இலங்கை அரசாங்கத்தினால் தமது கிரிக்கெட் அணி உட்பட அனைவருக்கும் வழங்கப்பட்ட சிநேகபூர்வமான விருந்தோம்பல் மற்றும் இலங்கை மக்களின் நட்புரீதியான வரவேற்பையும் அமைச்சர் மேலும் பாராட்டினார்.

இலங்கையுடனான உறவுகளை மேலும் வளர்த்து, பிராந்தியத்திற்கு உள்ளேயும் வெளியேயும் ஒத்துழைப்புடன் செயற்படுவது பாகிஸ்தானின் நோக்கம் என்றும், அதன்போது இலங்கை வழங்கி வரும் ஆதரவைப் பாராட்டினார்.

குறிப்பாக இரு நாடுகளுக்கும் இடையே முதலீடு, தொழிற் சந்தை மற்றும் சுற்றுலாத்துறை தொடர்பான விடயங்கள் குறித்து எதிர்காலத்தில் விரிவான கலந்துரையாடல்களை நடத்துவதற்கு எதிர்பார்ப்பதாகவும் பாகிஸ்தான் தூதுக்குழுவினர் மேலும் குறிப்பிட்டனர்.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!