இலங்கை செய்தி

யாழ். கோப்பாயில் மோதல்: நபரொருவர் அடித்துக் கொலை!

யாழ்.Jaffna கோப்பாய் Coppai பகுதியில் இன்று (16) மாலை இடம்பெற்ற மோதலில் ஒருவர் அடித்துப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

கோப்பாய் ஆசிரிய கலாசாலை வீதியில் வசிக்கும் 56 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

போக்குவரத்துப் பாதை தொடர்பாக ஏற்பட்ட வாய்த்தர்க்கம், பின்னர் கைகலப்பாக மாறியுள்ளது.

இதன்போது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் மேற்படி நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார் என்று பொலிஸாருக்குத் தகவல் வழங்கப்பட்டுள்ளது.

சம்பவ இடத்துக்கு விரைந்த கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

இந்தக் கொலைச் சம்பவம் தொடர்பாக நீதிவானின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ள நிலையில், மேலதிக சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!