வெற்றிக் கனியை ருசித்தது ஆப்கானிஸ்தான்!
ICC T – 20 உலக்கிண்ண தொடரில் இன்று நடைபெற்ற 28 ஆவது லீக் ஆட்டத்தில் 28th Match ஆப்கானிஸ்தான் அணி ஐந்து விக்கெட்டுகளால் வெற்றிபெற்றுள்ளது.
D குழுவில் இடம்பெற்றுள்ள ஆப்கானிஸ்தான் Afghanistan மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் United Arab Emirates
ஆகிய அணிகள் டெல்லியில் இன்று (16) பலப்பரீட்சை நடத்தின.
நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் பந்துவீச்சை தெரிவு செய்தது.
இதற்கமைய துடுப்பெடுத்தாடிய ஐக்கிய அரபு அமீகரம் UAE அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 9 ஓட்டங்களை இழந்து 160 ஓட்டங்களைப் பெற்றது.
Sohaib Khan 68 ஓட்டங்களையும், Alishan Sharafu 40 ஓட்டங்களையும் பெற்றன. பந்துவீச்சில் ஆப்கான் வீரர் Azmatullah Omarzai 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
பின்னர் 161 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் அணி 19.2 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 162 ஓட்டங்களைப் பெற்று வெற்றிக் கனியை ருசித்தது.





