அமெரிக்கா – ஈரான் ஒப்பந்தம் : நெதன்யாகு விதித்துள்ள நிபந்தனைகள்!
அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையிலான எந்தவொரு வருங்கால ஒப்பந்தத்திற்கும் அவசியமானதாகக் கருதும் நிபந்தனைகளை இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கோடிட்டு காட்டியுள்ளார்.
அதில், தெஹ்ரானின் அனைத்து அணுசக்தி உள்கட்டமைப்பையும் அகற்றுவது முக்கியமான ஒன்றாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்சி அமெரிக்காவுடன் இரண்டாவது சுற்று அணுசக்தி பேச்சுவார்த்தைக்காக சுவிட்சர்லாந்திற்குச் சென்ற நிலையில் இந்த விடயங்களை நெதன்யாகு குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் நேற்று இடம்பெற்ற அமெரிக்க யூத அமைப்புகளின் தலைவர்களுக்கான வருடாந்திர மாநாட்டில் பேசிய நெதன்யாகு, ஒப்பந்தம் குறித்து தனக்கு சந்தேகம் இருப்பதாகவும், எந்தவொரு ஒப்பந்தமும் பல கூறுகளை உள்ளடக்கியிருக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
“முதலாவது, அனைத்து செறிவூட்டப்பட்ட பொருட்களும் ஈரானிலிருந்து வெளியேற வேண்டும்,” இரண்டாவது, செறிவூட்டல் திறன் இருக்கக்கூடாது என்றும், மூன்றாவது பாலிஸ்டிக் ஏவுகணைகள் பிரச்சினையைத் தீர்க்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
அத்துடன் தெஹ்ரானின் அணுசக்தித் திட்டத்தின் தொடர்ச்சியான ஆய்வுகளுக்கும் நெதன்யாகு அழைப்பு விடுத்தார்.





