இந்தியா

09 ஆண்டுகளுக்கு பின் இஸ்ரேலுக்கு பயணமாகும் மோடி!

பிரதமர் நரேந்திர மோடி இந்த மாத இறுதியில் இஸ்ரேலுக்கு பயணம் மேற்கொள்வார் என்று அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இரு நாடுகளும் பாதுகாப்பு, பயங்கரவாத எதிர்ப்பு, மற்றும் விவசாயம் உள்ளிட்ட துறைகளில் இருதரப்பு உறவுகளை மேலும் ஆழப்படுத்த முயற்சிக்கும் நிலையில் இந்த பயணத்தை மோடி மேற்கொள்ளவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பயணத்திற்கான சரியான திகதிகள் அறிவிக்கப்படவில்லை.  இருப்பினும்  பிப்ரவரி 27-28 ஆம் திகதிகளில் இந்த பயணம் முன்னெடுக்கப்படலாம் என ஊகிக்கப்படுகிறது.

மோடி தனது மூன்றாவது பதவிக்காலத்தில் இஸ்ரேலுக்கு மேற்கொள்ளும் முதல் பயணம் இதுவாகும். மோடி தனது இஸ்ரேலிய சகாவான  பெஞ்சமின் நெதன்யாகுவுடன் விரிவான பேச்சுவார்த்தைகளை நடத்துவார் என்றும், மேற்கு ஆசியாவின் பாதுகாப்பு நிலைமை உட்பட பிராந்திய மற்றும் உலகளாவிய முன்னேற்றங்களையும் விவாதிப்பார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த பத்தாண்டுகளில் இந்தியாவும் இஸ்ரேலும் தங்கள் உறவுகளை சீராக மேம்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

VD

About Author

You may also like

இந்தியா செய்தி

இலங்கையில் உணவின்றி தவிக்கும் குடும்பங்கள்

இலங்கையின் மொத்த சனத்தொகையில் 59 வீதமான குடும்பங்கள் தேவையான உணவைப் பூர்த்தி செய்ய இயலவில்லை என தெரியவந்துள்ளது. அண்மையில் டுபாயில் நடைபெற்ற சர்வதேச கருத்தரங்கு ஒன்றில் இந்த
இந்தியா செய்தி

இலங்கையில் விமான டிக்கெட்டுக்கின் விலை குறைப்பு!

இலங்கையில் விமான டிக்கெட்டுக்களுக்கான விலை குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி ஐந்து சதவீதத்தினால் விமான டிக்கெட்டுக்களின் விலையை குறைக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பே
error: Content is protected !!