நாணய சுழற்சியில் பாகிஸ்தான் வெற்றி
2026 உலக கிண்ண இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி இன்று இரவு கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் ஆரம்பமானது.
போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற பாகிஸ்தான் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளது.
இதன்படி இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாடவுள்ளது.
இந்த போட்டியை முன்னிட்டு கொழும்பில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.





