ஐரோப்பா செய்தி

லண்டனில் பேராபத்தாக மாறிய தட்டம்மை பரவல் – மக்களுக்கு அவசர எச்சரிக்கை

வடக்கு லண்டனின் என்ஃபீல்ட் (Enfield) பகுதியில் தட்டம்மை (Measles) வேகமாகப் பரவி வருவதாக பிரித்தானிய சுகாதாரப் பாதுகாப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஜனவரி மாதத்தில் என்ஃபீல்டில் ஆய்வகத்தால் உறுதிப்படுத்தப்பட்ட 34 தட்டம்மை நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

இந்த ஆண்டு இங்கிலாந்து (England) முழுவதும் உறுதி செய்யப்பட்ட 96 வழக்குகளில் மூன்றில் ஒரு பங்கு என்ஃபீல்டைச் சேர்ந்தவை
என தெரிவிக்கப்பட்டுள்ளது.

என்ஃபீல்ட் (Enfield) மற்றும் அண்டை ஹாரிங்கி (Haringey) பகுதிகளில் சுமார் ஏழு
பாடசாலைகளில் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தற்போதைய தொற்று முக்கியமாக குழந்தைகளைப் பாதித்துள்ளதாக தெரிவித்த என்ஃபீல்ட் கவுன்சிலர் அலெவ் காசிமோக்லு
(Alev Cazimoglu) சிலர் மேலதிக சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

பிரித்தானிய சுகாதாரப் பாதுகாப்பு நிறுவனத்தை சேர்ந்த டொக்டர் Vanessa Saliba, தட்டம்மை கடுமையான நோயாக இருக்கலாம்
என்று கூறியுள்ளார்.

ஆனால் MMR (Measles, Mumps, Rubella) தடுப்பூசியின் இரண்டு டோஸ்கள் மூலம் இதனை குணப்படுத்தலாம் என்றும் அவர்
வலியுறுத்தினார்.

பிரித்தானிய சுகாதாரப் பாதுகாப்பு நிறுவனத்தின் தரவுகளின்படி, 2024-25 ஆண்டில் பிரித்தானியா முழுவதும் 84.4% குழந்தைகள்
ஐந்தாவது பிறந்தநாளுக்குள் இரண்டு MMR டோஸ்களைப் பெற்றுள்ளனர். பரிந்துரைக்கப்பட்ட அளவு 95% ஆகும்.

2024 ஆம் ஆண்டு ஏற்பட்ட தட்டம்மை பரவலைத் தொடர்ந்து, ஜனவரி மாதம் உலக சுகாதார அமைப்பு (WHO), இங்கிலாந்து தட்டம்மை ஒழிப்பு (Measles elimination) நிலையை இழந்துவிட்டதாக அறிவித்தது.

சுகாதார அதிகாரிகள், குடும்பங்கள் தங்கள் குழந்தைகளின் தடுப்பூசி நிலையை உடனடியாகச் சரிபார்க்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

Sainth

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!