கிரேட்டர் மான்செஸ்டரில் மாத இறுதியில் இடைத்தேர்தல்
கிரேட்டர் மான்செஸ்டரில் உள்ள கோர்டன் மற்றும் டென்டன் (Greater Manchester – the Gorton and Denton)
தொகுதியில் இந்த மாத இறுதியில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.
இது பிரதமருக்கு முக்கியமான அரசியல் சோதனையாக பார்க்கப்படுகிறது.
இந்த தொகுதியில் 18 மாதங்களுக்கு முன்பு தொழிற்கட்சி மாபெரும் வெற்றி பெற்றது.
ஆனால் அங்கு பதவி வகித்த எம்.பி. Andrew Gwynne அனுப்பிய அவமதிப்பான குறுஞ்செய்திகள்
வெளியாகியதைத் தொடர்ந்து, அவர் கட்சியால் இடைநீக்கம் செய்யப்பட்டார்.
பின்னர் அவர் தனது பதவியிலிருந்து ராஜினாமா செய்தார்.
கிரேட்டர் மான்செஸ்டரின் மேயர் ஆண்டி பர்ன்ஹாம் (Andy Burnham), கோர்டன் மற்றும் டென்டன்
இடைத்தேர்தலை தேசிய அரசியலுக்கு மீண்டும் திரும்பும் ஒரு வாய்ப்பாகக் கருதியதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஆனால் தொழிற்கட்சியின் மத்திய தலைமையினர் அவரது போட்டியிடும் முயற்சிக்கு ஆதரவு வழங்கவில்லை.
இதன் பின்னர், உள்ளூர் கவுன்சிலர் ஏஞ்சலிகி ஸ்டோஜியா (Angeliki Stogia) தொழிற்கட்சியின் உத்தியோகப்பூர்வ வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளார்.





