ஸ்காட்லாந்து, வேல்ஸ் தேர்தல்கள்- பெரும் சவாலுக்கு முகங்கொடுத்து வரும் பிரதமர்
பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் (Keir Starmer) தலைமைக்கும் தொடர்ந்தும் அழுத்து அதிகரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பிரதமர் பதவி விலக வேண்டும் என ஸ்காட்லாந்து தொழிற்கட்சித் தலைவர், கூறியதைத் தொடர்ந்து, அவரது தலைமையைப் பற்றி கட்சிக்குள் விமர்சனங்கள் எழுந்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் மே மாதத்தில் நடைபெற உள்ள ஸ்காட்லாந்து, வேல்ஸ் மற்றும் உள்ளூர் தேர்தல்கள் தொழிற்கட்சிக்கு முக்கியமான சோதனையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த தேர்தல்களில் கட்சி மோசமான முடிவுகளை சந்தித்தால், ஸ்டார்மரின் தலைமைக்கு சவால் ஏற்படலாம் என்றும் சில தொழிற்கட்சி எம்.பி.க்கள் கருதுகின்றனர்.





