பாலஸ்தீனத்திற்கான ஐ.நாவின் சிறப்பு அறிக்கையாளர் பதவி விலக அழைப்பு – பலர் ஆதரவு!
பாலஸ்தீனத்திற்கான ஐ.நாவின் சிறப்பு அறிக்கையாளர் பதவி விலக அழைப்பு விடுக்கப்பட்டுள்ள நிலையில், அவருக்கு ஆதரவாக 100க்கும் மேற்பட்ட முக்கிய இசைக்கலைஞர்கள், நடிகர்கள் மற்றும் எழுத்தாளர்கள் திறந்த கடிதத்தில் கையெழுத்திட்டுள்ளனர்.
குறித்த கடிதத்தில் கையெழுத்திட்டவர்கள், பாலஸ்தீன மக்களின் இருப்பு உரிமையைப் பாதுகாப்பவரான பிரான்செஸ்கா அல்பானீஸுக்கு ( Francesca Albanese) முழு ஆதரவையும்” வழங்கினர்.
காசா மீதான இஸ்ரேலின் இனப்படுகொலைப் போரை வெளிப்படையாக விமர்சித்த அல்பானீஸ், “மனிதகுலமாக நமக்கு ஒரு பொதுவான எதிரி இருக்கிறார்” என்று கடந்த வாரம் தெரிவித்திருந்தார்.
பின்னர் ஒரு சமூக ஊடகப் பதிவில் “பாலஸ்தீனத்தில் இனப்படுகொலையை செயல்படுத்திய அமைப்பை பொது எதிரி என்று வகைப்படுத்தியதாக விளக்கினார்.
இதனைத் தொடர்ந்தே அவர் பதவி விலக வேண்டும் என அழைப்பு விடுக்கப்பட்டது. இந்நிலையில் அவருக்கு ஆதரவாக பலர் கையெழுத்திட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.





