17 ஆம் திகதி இலங்கை வருகிறார் பிரிட்டன் துணை பிரதமர்!
பிரிட்டன் துணைப் பிரதமரான டேவிட் லம்மி David Lammy , எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (17) இலங்கைக்கு குறுகிய கால விஜயமொன்றை மேற்கொள்கின்றார்.
இந்த விஜயத்தின் போது, அவர் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க, பிரதமர் ஹரிணி அமரசூரிய மற்றும் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் ஆகியோருடன் முக்கிய சந்திப்புகளில் ஈடுபடவுள்ளார்.
தமிழ் அரசியல் தலைவர்கள் சிலரையும் அவர் சந்திப்பார் என தெரியவருகின்றது.
மேலும், “குழந்தைகள் பராமரிப்பு தொடர்பான உலகளாவிய சாசனம்” (Charter for the Global Campaign on Children’s Care) குறித்த உடன்படிக்கையிலும் அவர் கையெழுத்திடவுள்ளார்.
டேவிட் லம்மி செவ்வாய்க்கிழமை காலை இலங்கை வந்தடைந்து, இலங்கை தலைவர்களுடன் கலந்துரையாடல்களில் ஈடுபட்ட பின்னர், ஐக்கிய நாடுகள் அமைப்பு அலுவலகத்தில் நடைபெறும் “Global Charter on Children’s Care Reform” நிகழ்விலும் பங்கேற்கவுள்ளார்.
தனது குறுகிய கால விஜயத்தை நிறைவு செய்த பின்னர், டேவிட் லம்மி 17 ஆம் திகதி மாலையே இலங்கையிலிருந்து புறப்படவுள்ளார்.





