ஐரோப்பா

அட்லாண்டிக் மற்றும் உயர் வடக்குப் பகுதிகளுக்கு போர் கப்பல்களை அனுப்பும் பிரித்தானியா!

வடக்கு அட்லாண்டிக் மற்றும் உயர் வடக்குப் பகுதிகளுக்கு விமானம் தாங்கி போர்க்கப்பல்களை அனுப்பவுள்ளதாக பிரித்தானிய பிரதமர் கெய்ர்  ஸ்டாமர் தெரிவித்துள்ளார்.

இன்று இடம்பெற்ற முனிச் பாதுகாப்பு மாநாட்டில் பேசிய அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர், அமெரிக்கா, கனடா மற்றும் பிற நேட்டோ நட்பு நாடுகளுடன் இணைந்து செயல்படும்” HMS பிரின்ஸ் ஆஃப் வேல்ஸ் கப்பலால் (HMS Prince of Wales) இது வழிநடத்தப்படும் என்றும் கூறினார்.

இது யூரோ-அட்லாண்டிக் பாதுகாப்பிற்கான எங்கள் உறுதிப்பாட்டின் சக்திவாய்ந்த வெளிப்பாடாகும்” என்று அவர் மேலும் தெரிவித்தார்.

அத்துடன்  பல தசாப்தங்களாக, அனைத்து நேட்டோ உறுப்பினர்களையும் பாதுகாக்க அதன் தடுப்பு நடவடிக்கைகளை உறுதி செய்யும் ஐரோப்பாவில் உள்ள ஒரே அணுசக்தி நாடாக ஐக்கிய இராச்சியம் உள்ளது எனக் கூறிய அவர், பிரான்ஸுடனான  அணுசக்தி ஒத்துழைப்பை மேம்படுத்துவதாகவும் உறுதியளித்துள்ளார்.

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!