இலங்கை செய்தி

14 வருடங்களுக்கு பிறகு விசேட கூட்டம்: கொழும்பில் நாளை அணிதிரளும் சட்டத்தரணிகள்!

இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் விசேட கூட்டமொன்று நாளை (15) மாலை 3 மணிக்கு கொழும்பில் நடைபெறவுள்ளது.

சட்டத்தரணியொருவரும், அவரது மனைவியும் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ள பின்புலத்திலேயே, அடுத்த கட்ட நடவடிக்கைகள் தொடர்பில் ஆராய்வதற்காக கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தரணிகள் சங்கத்தில் அங்கம் வகிக்கும் அனைத்து உறுப்பினர்களையும் கொழும்பு வருமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

2012 ஆம் ஆண்டுக்கு பிறகே இவ்வாறானதொரு விசேட கூட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
மேற்படி தாக்குதல் சம்பவத்தை சட்டத்தரணிகள் சங்கம் வன்மையாகக் கண்டித்துள்ளது. பொது மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறும் அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!