அமெரிக்காவை பார்த்து உலகம் அஞ்சுகிறது – ட்ரம்ப் பெருமிதம்!
வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோவை வெளியேற்றுவதில் சிறப்புப் படைகளின் பங்களிப்பை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பாராட்டியுள்ளார்.
ஊடகங்கள் முன்னிலையில் நேற்று கருத்து வௌயிட்ட அவர், “அமெரிக்காவின் முழு இராணுவ வலிமையால் என்ன செய்ய முடியும் என்பதை இந்த சம்பவம் எடுத்துக்கூறியுள்ளதாகவும், தற்போது உலகெங்கிலும் உள்ள எதிரிகள் அமெரிக்காவை பார்த்து அஞ்சுவதாகவும் தெரிவித்துள்ளார்.
அத்துடன் அமெரிக்க இராணுவத்தை “மிகவும் உயரடுக்கு சண்டைப் படையாக” பராமரிக்கவும் உறுதியளித்துள்ளார்.
இதேவேளை ஊடகவியலாளர் சந்திப்பிற்கு முன்னதாக ட்ரம்ப் மற்றும் அவருடைய மனைவி மெலனியா ட்ரம்ப் ஆகியோர், படைவீரர்களின் குடும்பத்தினரை சந்தித்து கலந்துரையாடியதாகவும் கூறப்படுகிறது.
மேலும் வெனிசுலாவின் புதிய அரசாங்கத்துடன் இணைந்து எரிசக்தி துறையை மீளக் கட்டியெழுப்ப அமெரிக்கா முன்னெடுத்து வரும் நடவடிக்கைகளையும் ட்ரம்ப் இதன்போது விளக்கியுள்ளார்.





