உலகம் செய்தி

இம்ரான் கானுக்கு பார்வை குறைபாடு – வழக்கறிஞர்கள் உச்ச நீதிமன்றத்தில் புகார்

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு, சிறை அதிகாரிகள் சரியான மருத்துவ உதவிகளை வழங்கவில்லை என்பதால் வலது கண்ணில் 15% மட்டுமே பார்வை உள்ளதாக அவரது வழக்கறிஞர்கள் உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.

முன்னாள் பிரதமர் மூன்று முதல் நான்கு மாதங்களுக்கு முன்பு பார்வை குறைபாட்டை அனுபவிக்கத் தொடங்கியதாவும்,  சிறை கண்காணிப்பாளர்கள் கண் மருந்து வழங்குவது தவிர வேறு நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் அவரது வழக்கறிஞர் சல்மான் சஃப்தார் கூறியுள்ளார்.

ஜனவரி 24 அன்று, கான் பிம்ஸ் மருத்துவமனையில் 20 நிமிட மருத்துவ சிகிச்சை பெற்றதாக அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால் சஃப்தார், அவரது வலது கண்ணில் இரத்த உறைவு கண்டறியப்பட்டதால் கடுமையான பார்வை குறைபாடு ஏற்பட்டதாகவும், பார்வை இழப்பும் ஆழ்ந்த மன உளைச்சலும் ஏற்பட்டதாகவும் தெரிவித்தார்.

மேலும் , நிபுணத்துவமுடைய கண் மருத்துவர்கள் பரிசோதனை நடத்தவும், கானின் குடும்பத்தினரை சந்திக்கவும், சிறை நிலைமைகளை மேம்படுத்தவும் வழக்கறிஞர் நீதிமன்றத்திடம் கோரிக்கை மனு சமர்ப்பித்தார்.

தற்போது கான் அடியாலா சிறையில் தனிப்பட்ட மருத்துவர்களை அணுகலாம், மகன்கள் காசிம் மற்றும் சுலைமான் தொலைபேசியில் தொடர்பு கொள்ளவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Sainth

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!