37 ஆண்டுகளுக்கு பின்னர் நைஜீரியா பயணமாகும் பிரித்தானிய மன்னர்!
37 ஆண்டுகளுக்கு பின்னர் மன்னர் மூன்றாம் சார்லஸ் மற்றும் ராணி கமிலா ஆகியோர் நைஜீரியாவிற்கு பயணம் மேற்கொள்ளவுள்ளதாக பக்கிங்ஹாம் (Buckingham) அரண்மனை அறிவித்துள்ளது.
மார்ச் 18 முதல் 19 வரை விண்ட்சர் கோட்டையில் மன்னரின் விருந்தினர்களாக இருப்பதற்கான அழைப்பை போலா டினுபு (Bola Tinubu) மற்றும் முதல் பெண்மணி ஒலுரேமி டினுபு (Oluremi Tinubu) ஆகியோர் ஏற்றுக்கொண்டுள்ள நிலையில் இந்த தகவல் வந்துள்ளது.
நைஜீரிய அரசு இங்கிலாந்துக்கு கடைசியாக 1989 ஆம் ஆண்டு விஜயம் செய்திருந்தது. அப்போது ஆட்சியில் இருந்த ஜெனரல் இப்ராஹிம் பாபாங்கிடா ( Gen Ibrahim Babangida) மற்றும் மறைந்த ராணி இரண்டாம் எலிசபெத் (Queen Elizabeth) ஆகியோர் விஜயம் செய்திருந்தனர்.
இந்த சந்திப்பை தொடர்ந்து தற்போதே நைஜீரியா அரசு முறைப் பயணமாக இங்கிலாந்திற்கு வருகை தரவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.





