“படையினரை அவமதித்த தரப்பே தற்போது அபிமானம் பற்றி கதைக்கிறது”
“படையினரை மணல் மூட்டை அடுக்குவதற்கு அன்று பயன்படுத்தியவர்களே, இன்று படையினருக்குரிய அபிமானம் பற்றி கதைக்கின்றனர்.” என்று பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர Aruna Jayasekara தெரிவித்தார்.
சுதந்திர தின அணிவகுப்பின்போது போரை முடிப்பதற்கு படையினர் வழங்கிய பங்களிப்பு பற்றி பேசப்படவில்லை என மஹிந்த அணி குற்றஞ்சாட்டிவருகின்றது.
இந்நிலையில் நாடாளுமன்றத்தில் உரையாற்றிய பாதுகாப்பு பிரதி அமைச்சர் கூறியவை வருமாறு,
“ முப்படையினரின் அர்ப்பணிப்பு மற்றும் அபிமானம் என்னவென்பது எமக்கு தெரியும். அதனை நாம் பாதுகாப்போம்.
ஆனால் படையினரின் அபிமானம் பற்றி இன்று கதைப்பவர்கள் இராணுவத்தினரை அன்று மணல் மூட்டை அடுக்குவதற்கும், கார் ஓட்டப் பந்தயம் நடத்துவதற்குமே பயன்படுத்தினர்.
இராணுவத்தின் அபிமானத்தை அவர்கள் இல்லாது செய்ததால்தான் நாம் களத்துக்கு வந்தோம்.
தேசிய மக்கள் சக்தியின் கொள்கையில் உள்ள முக்கியத்துவம் காரணமாகவே, ஓய்வுபெற்ற அமைப்பினர் அதில் இணைந்தனர்.” – என்றார்.





