இஸ்ரேல் ஜனாதிபதி நாளை ஆஸ்திரேலியா விஜயம்!
இஸ்ரேல் ஜனாதிபதி Israeli President Isaac Herzog நாளை ஆஸ்திரேலியாவுக்கு Australia பயணம் மேற்கொள்கின்றார்.
அவரது பயணத்தை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளது.
ஐந்து நாட்கள் பயணமாக ஆஸ்திரேலியா வரும் அவர், முக்கிய பல நிகழ்வுகளில் பங்கேற்கவுள்ளார்.
ஆஸ்திரேலியா பிரதமர், வெளிவிவகார அமைச்சர் உள்ளிட்ட உயர்மட்ட தலைவர்களையும் சந்திக்கவுள்ளார்.
ஆஸ்திரேலியாவில் சிட்னி, போண்டி கடற்கரையில் யூத சமூகத்தை இலக்குவைத்து நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலில் 14 பேர் கொல்லப்பட்டனர்.
இத்தாக்குதல் சம்பவத்தையடுத்து இஸ்ரேல் மற்றும் ஆஸ்திரேலியாவுக்கிடையிலான இராஜதந்திர உறவில் விரிசல் ஏற்பட்டது.
பாலஸ்தீனரத்தை அங்கீகரிக்கும் ஆஸ்திரேலியாவின் முடிவால் ஏற்கனவே கடுப்பில் இருந்த இஸ்ரேல், இவ்விவகாரத்தை பயன்படுத்தி ஆஸ்திரேலியாமீது விமர்சனக் கணை தொடுத்தது.
இந்நிலையில் யூத சமூகத்துக்கு ஆதரவாக இஸ்ரேல் ஜனாதிபதியை ஆஸ்திரேலியா அழைத்தது.
இந்த அழைப்பை ஏற்றே அவர் நாளை ஆஸ்திரேலியா வருகின்றார். இதனை முன்னிட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.





