அவசரகால சட்டத்துக்கு எதிராக இரு தமிழ் எம்.பிக்கள் மட்டுமே வாக்களிப்பு!
அவசரகாலச் சட்டத்தை மேலும் ஒரு மாதத்திற்கு நீடிக்கும் பிரேரணைக்கு எதிராக இரு தமிழ் எம்.பிக்கள் மட்டுமே வாக்களித்துள்ளனர்.
கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் செல்வம் அடைக்கலநாதன் ஆகியோர் மட்டும் எதிராக வாக்களித்தனர்.
டித்வா புயலால் ஏற்பட்ட பேரிடரை அடுத்து கடந்த நவம்பர் 28ஆம் திகதி ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவால் அவசரகால சட்டம் அமுல்படுத்தப்பட்டது.
அதையடுத்து அரசாங்கம் நாடாளுமன்ற அனுமதியுடன் அவசரகாலச் சட்டத்தை மாதம் தோறும் நீடித்து வருகிறது.
இந்த நிலையில் அவசரகாலச் சட்ட நீடிப்பு பிரேரணை மீது நேற்று நடத்தப்பட்ட விவாதத்தை அடுத்து வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.
இதன்போது, 106 நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவசரகாலச் சட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்தனர்.
வாக்கெடுப்பின் போது மொத்தம் 116 நாடாளுமன்ற உறுப்பினர்கள் சபையில் இருக்கவில்லை. இரு தமிழ் எம்.பிக்கள் மட்டுமே எதிரவாக வாக்களித்தனர்.





