கிவுல் ஓயா திட்டத்துக்கு எதிராக இன்று போராட்டம்!
கிவுல் ஓயா திட்டத்துக்கு Kivul Oya project எதிர்ப்புத் தெரிவித்து வவுனியா – நெடுங்கேணியில் Vavuniya – Nedunkerni இன்று (02) போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
இலங்கை நேரப்படி முற்பகல் 10 மணிக்கு போராட்டம் ஆரம்பமாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இப்போராட்டத்தில் பங்கேற்குமாறு மக்களுக்கு ஏற்பாட்டுக்குழு அழைப்பு விடுத்துள்ளது.
நெடுங்கேணி பஸ் நிலையம் முன்பாக ஒன்றுகூடும் போராட்டக்காரர்கள் அங்கிருந்து பேரணியாக நெடுங்கேணி பிரதேச செயலகம் வரை செல்லவுள்ளனர்.
போராட்டத்தின் நிறைவில் மனு ஒன்றும் கையளிக்கப்படவுள்ளது.
குறித்த போராட்டத்துக்கு இலங்கைத் தமிழரசுக் கட்சி, ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணி உள்ளிட்ட தமிழ்த் தேசியக் கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன.
அதேவேளை, கிவுல் ஓயா திட்டமானது தமிழர்களின் இனப்பரம்பலை மாற்றியமைக்கும் செயல் என தமிழ்த் தேசியக் கட்சிகள் குற்றஞ்சாட்டுகின்றன.
எனினும், அந்த குற்றச்சாட்டை அரசாங்கம் முற்றாக நிராகரித்துள்ளது.





