அரசியல் இலங்கை செய்தி

ட்ரம்புக்கு எதிராக இலங்கையில் போராட்டம்: இடதுசாரி கட்சிகள் அதிரடி!

“அமெரிக்கா ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புக்கு எதிராக இலங்கையில் போராட்டம் நடத்தப்படும்.”

இவ்வாறு ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான வாசுதேவ நாணயக்கார Vasudeva Nanayakkara தெரிவித்தார்.

வெனிசுலாமீதான ட்ரம்பின் ஆக்கிரமிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்தே இடதுசாரி சக்திகளுடன் இணைந்து கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகம் நோக்கி பேரணியாக செல்லவுள்ளோம் எனவும் அவர் கூறினார்.

எனினும், திகதி விவரம் தொடர்பான தகவல்களை வாசுதேவ நாணயக்கார வெளியிடவில்லை.

“ எண்ணெய் வளம்மீதான பேராசை காரணமாகவே வெனிசுலாமீது ட்ரம்ப் தாக்குதல் நடத்தியுள்ளார்.

ட்ரம்பின் இந்த செயல் நிச்சயம் அவருக்கு எதிராகவே திருப்பி, அவரின் அரசியல் கதை இத்துடன் முடியக்கூடும்.

அமெரிக்காவில் ஜனநாயகத்தை விரும்பும் மக்களே ட்ரம்புக்கு எதிராக நியூயார்க்கில் மேயரை தெரிவு செய்தனர். எனவே, ட்ரம்பின் செயலையும் நிச்சயம் கண்டிப்பார்கள்.

தென் அமெரிக்க நாடுகள்கூட ட்ரம்பின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன.” – என்றார் வாசுதேவ நாணயக்கார.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!