சாதகமற்ற தன்மை – விமான தாமதம் குறித்து வெளியான அறிவிப்பு!
வடக்கு மற்றும் கிழக்கு இந்தியாவின் சில பகுதிகளில் அடர்ந்த மூடுபனி மற்றும் குளிர் நிலவுவதால் சில விமானங்கள் தாமதமாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இண்டிகோ நிறுவனம் இன்று தனது பயண ஆலோசனையை புதுப்பித்துள்ளது.
இதற்கமைய அமிர்தசரஸ், சண்டிகர் மற்றும் ராஞ்சி விமான நிலையங்கள் மூடுப்பனி காரணமாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இதனால் விமான சேவைகள் தாமதமாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் மாறிவரும் வானிலை நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாகவும், பாதுகாப்பு மற்றும் ஒழுங்குமுறை இணக்கத்திற்கு முன்னுரிமை அளிப்பதாகவும் இண்டிகோ நிறுவனம் மேலும் குறிப்பிட்டுள்ளது.
வானிலை மாற்றங்களுக்கு ஏற்பட விமான சேவைகளிலும் மாற்றங்கள் அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.





