அமெரிக்காவின் கொள்கைகள் – இந்தியாவுடன் கூட்டு சேரும் சீனா!
அமெரிக்கா தனது பாதுகாப்புக் கொள்கையைத் திரித்து, தனது நாட்டிற்கும் பிற நாடுகளுக்கும் இடையில் முரண்பாடுகளை விதைப்பதாக சீனா குற்றம் சாட்டியுள்ளது.
அதன்படி, சீனா பரஸ்பர நம்பிக்கையை அதிகரிக்கவும், ஒத்துழைப்பை மேம்படுத்தவும், இந்தியாவுடன் சிறப்பாக செயல்படவும் தயாராக இருப்பதாக அறிவித்துள்ளது.
சீன வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீனா இந்தியாவுடனான உறவுகளை மூலோபாய மதிப்பு மற்றும் நீண்டகால கண்ணோட்டத்துடன் பார்க்கிறது என்று சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் அடிப்படையற்ற மற்றும் பொறுப்பற்ற கருத்துக்களை சீனா எதிர்க்கிறது என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.





