அரசியல் இலங்கை செய்தி

2033 வரை அவகாசம் வேண்டும்: ஐ.எம்.எவ். ஒப்பந்தத்தில் மாற்றம் கோருகிறார் சஜித்!

சர்வதேச நாணய நிதியத்துடனான ஒப்பந்தத்தில் திருத்தம் மேற்கொள்வதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச வலியுறுத்தினார்.

மாவனல்லை, அரநாயக்க பகுதியில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இது தொடர்பில் சஜித் பிரேமதாச மேலும் கூறியவை வருமாறு,

” 2033 ஆம் ஆண்டில் இருந்து கடனைத் திருப்பிச் செலுத்துமாறே சர்வதேச நாணய நிதியம் அறிவுறுத்தி இருந்தது. எனினும், அப்போதைய அரசாங்கம் 2028 முதல் கடன் மீள செலுத்தப்படும் என தானாகவே ஒப்புதல் அளித்தது.

டித்வா புயலுக்கு முன்பு இருந்த சூழ்நிலையில்கூட 2028 ஆம் ஆண்டில் வெளிநாட்டுக் கடனைத் திருப்பிச் செலுத்துவது கடினமான விடயமாக காணப்பட்டது.

எனவே, தற்போதைய அரசாங்கம் இப்போதாவது மேற்படி ஒப்பந்தத்தை திருத்தியமைப்பதில் கவனம் செலுத்த வேண்டும்.

நாடு மீண்டும் கட்டியெழுப்பப்பட்டு, மக்களின் வாழ்க்கை இயல்பு நிலைக்குத் திரும்பும் வரை இலங்கைக்கு சலுகை அவசியம்.

எனவே, கடனை மீள செலுத்துவதற்கு காலம் தேவைப்படுவதால், ஐ.எம்.எவ். (IMF) ஒப்பந்தத்தை திருத்தியமைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.” – என்றார் சஜித்

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!