பாலிவூட்டின் மூத்த நடிகர் தர்மேந்திரா திடீர் மரணம்
பாலிவூட்டின் மூத்த நடிகர் தர்மேந்திரா மாரடைப்பு காரணமாக இன்று காலமானார்.
கடந்த மாதம் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீட்டிலேயே சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில், இன்று மாரடைப்பு காரணமாக அவர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
தர்மேந்திராவின் இறுதிச் சடங்கு வில்லே பார்லேயில் உள்ள மயானத்தில் நடைபெற்றது.
தர்மேந்திராவின் மூத்த மகன் சன்னி தியோல் அவருக்கு இறுதிச் சடங்குகளை செய்தார்.
தர்மேந்திராவுக்கு பாலிவூட் நட்சத்திரங்கள் பலரும் சேரில் சென்று இரங்கல் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.






