ஐரோப்பா

சுவிட்சர்லாந்து மீதான இறக்குமதி வரியை குறைத்த ட்ரம்ப்!

சுவிட்சர்லாந்து மீது விதித்துள்ள 39 சதவீதமான இறக்குமதி வரியை 15  சதவீதமாக குறைக்க அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நடவடிக்கை எடுத்துள்ளார்.

அமெரிக்காவில் 200 பில்லியன் டொலர் முதலீடு செய்வதாக சுவிட்சர்லாந்து அறிவித்ததை தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது.

“இது நமது பொருளாதாரத்திற்கு ஒரு பெரிய நிவாரணம்” என்று சுவிஸ் பொருளாதார அமைச்சர் கை பர்மெலின் (Guy Parmelin) கூறியுள்ளார்.

சுவிஸ் வணிகத் தலைவர்கள் ட்ரம்ப்பை சந்திக்க எடுத்த முயற்சிகள்  இந்த ஒப்பந்தத்தை எட்டுவதில் பங்களித்துள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்த ஒப்பந்தத்தின்படி, 2028 ஆம் ஆண்டுக்குள்  அமெரிக்காவில் நேரடியாக 200 பில்லியன் டொலர்களை முதலீடு செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளதாக பொருளாதார அமைச்சர் கூறினார்.

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்