ஐரோப்பா செய்தி

பிரான்ஸில் மக்கள் மத்தியில் செல்வாக்கை இழந்த மக்ரோன் (Macron) !

கடந்த 70 ஆண்டு காலத்தில் பிரான்ஸை ஆட்சி செய்த ஆட்சியாளர்களில் ஜனாதிபதி இமானுவேல் மக்ரோனின் ( Emmanuel Macron) புகழ் கீழ் மட்டத்திற்கு சென்றதாக கருத்து கணிப்பு ஒன்று தெரிவித்துள்ளது.

லீ பிகாரோ ( Le Figaro) பத்திரிகைக்கான வெரியன் (Verian) கருத்துக் கணிப்பின்படி, இந்த தகவல் வெளியாகியுள்ளது.

பிரெஞ்சு மக்களில் வெறும் 11 சதவீதமானோர் மட்டுமே மக்ரோனை ஆதரிப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

பிரான்ஸில் பொருளாதார பிரச்சினைகள் அதிகரித்துள்ளன. வரவு செலவு திட்டத்தை சமர்ப்பிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. அடுத்தடுத்து வந்த பிரதமர்கள் பதவி விலகினர்.

மக்களின் நலச்சீர்த்திருத்தங்களில் தொய்வு நிலை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக செலவீன குறைப்பு சட்டமூலம் கடும் விமர்சனத்திற்கு உள்ளானது.

இந்த சூழ்நிலையில் நாடாளுமன்றம்  கலைக்கப்பட்டு ஜனாதிபதி தேர்தல் நடத்தப்பட வேண்டும் என பல தரப்பினர் கோரிக்கை விடுத்தனர். இருப்பினும் ஜனாதிபதி அந்த கோரிக்கைகளை மறுத்துள்ளார்.

இந்நிலையில் தற்போதை அரசாங்கத்தின் மீது மக்கள் நம்பிக்கையை இழந்துள்ளனர். இதன்காரணமாகவே அவருடைய புகழ் குறைந்த மட்டத்திற்கு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

VD

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி