உலகம்

ChatGPT ஆல் அமெரிக்க சட்டத்தரணிக்கு ஏற்பட்ட சோதனை

நியூயார்க் வழக்கறிஞர் ஒருவர் தனது சட்ட ஆராய்ச்சிற்கு AI கருவியான ChatGPT ஐப்  பயன்படுத்தியமையால், நீதிமன்ற விசாரணையை எதிர்கொண்டுள்ளார்.

நபர் ஒருவர் விமானம் நிறுவனம் மீது வழக்கு தொடர்ந்துள்ள நிலையில், அந்த வழக்கை முன்கொண்டு நடத்துவதற்காக சில முன்னோடி வழக்குகளை உதாரணமாக முன்வைப்பதற்கு வழக்கறிஞர் ChatGPT ஐப் பயன்படுத்தியுள்ளார்.

இந்நிலையில், இவ்வாறாக குறிப்பிடப்பட்ட முன்னோடி வழக்குகளை  தங்களால் கண்டுப்பிடிக்க முடியவில்லை என விமான நிறுவனம் சார்பில் முன்னிலையான வழக்கறிஞர் குறிப்பிட்டார். இதனையடுத்து முன்னோடி வழக்குகள் குறித்து விவரிக்க வேண்டும் என நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.

இந்த சூழலில் 30 ஆண்டுகளுக்கும் மேல் வழக்கறிஞராக பணியாற்றிவரும், ஸ்டீவன் ஏ ஸ்வார்ட்ஸ் முந்தைய வழக்குகளைத் தேடுவதற்கு ChatGPT ஐப் பயன்படுத்தியதை ஒப்புக்கொண்டுள்ளார்.

அதேநேரம் ChatGPT  ஐ நம்பியமைக்கு மிகவும் வருந்துகிறேன் என்றும் தெரிவித்தார். இதற்கு முன்பு பயன்படுத்தியதில்லை, அதன் உள்ளடக்கம் பொய்யாக இருக்கலாம் எனவும் அவர் கூறினார்.

எதிர்காலத்தில் “அதன் நம்பகத்தன்மையின் முழுமையான சரிபார்ப்பு இல்லாமல்” தனது சட்ட ஆராய்ச்சிக்கு “துணையாக” AI ஐ பயன்படுத்த மாட்டேன் என்றும்  அவர் சபதம் செய்துள்ளார்.

(Visited 15 times, 1 visits today)

VD

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்