இந்தியா

பயிற்சியின் போது விழுந்து நொறுங்கிய இந்தியப் போர் விமானம்; விமானிகள் இருவர் பலி

இந்திய விமானப்படைக்குச் சொந்தமான ஜாகுவார் போர் விமானம் ஒன்று புதன்கிழமை (ஜூலை 9) ராஜஸ்தான் மாநிலம், சூரு மாவட்டத்தில் விழுந்து நொறுங்கியது.

அம்மாவட்டத்தின் ரத்தன்கர் நகருக்கு அருகே இவ்விபத்து நேர்ந்தது. இதில் விமானத்தின் இரு விமானிகளும் உயிரிழந்து போனதாக இந்திய விமானப்படை தனது எக்ஸ் பக்கம் வழியாகத் தெரிவித்தது.

வழக்கமான பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது விபத்து நேர்ந்ததாக அது குறிப்பிட்டது. இவ்விபத்தில் பொதுமக்களின் உடைமைகள் எதுவும் சேதமடையவில்லை.விமானம் விழுந்து நொறுங்கியதற்கான காரணத்தைக் கண்டறிய விசாரணைக் குழு ஒன்றை இந்திய விமானப்படை அமைத்துள்ளது.

விபத்து குறித்த தகவல் அறிந்ததும் நிலைமையை மதிப்பிடவும் தேடல், மீட்புப் பணிகளில் ஈடுபடவும் காவல்துறைக் குழுக்கள் அவ்விடத்திற்கு விரைந்ததாக ஏஎன்ஐ செய்தி வெளியிட்டுள்ளது.

“விபத்து நேர்ந்த இடத்திற்கு அருகே மனித உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டன,” என்று கமலேஷ் என்ற காவல்துறை உயரதிகாரி தெரிவித்தார்.

Mithu

About Author

You may also like

இந்தியா செய்தி

இலங்கையில் உணவின்றி தவிக்கும் குடும்பங்கள்

இலங்கையின் மொத்த சனத்தொகையில் 59 வீதமான குடும்பங்கள் தேவையான உணவைப் பூர்த்தி செய்ய இயலவில்லை என தெரியவந்துள்ளது. அண்மையில் டுபாயில் நடைபெற்ற சர்வதேச கருத்தரங்கு ஒன்றில் இந்த
இந்தியா செய்தி

இலங்கையில் விமான டிக்கெட்டுக்கின் விலை குறைப்பு!

இலங்கையில் விமான டிக்கெட்டுக்களுக்கான விலை குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி ஐந்து சதவீதத்தினால் விமான டிக்கெட்டுக்களின் விலையை குறைக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பே