இலங்கையின் பல பகுதிகளில் மின்னல் தாக்கம் குறித்து எச்சரிக்கை!

இலங்கையின் பல பகுதிகளில் பலத்த மின்னல் ஏற்படும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
வடமத்திய மாகாணம் மற்றும் மாத்தளை, திருகோணமலை, வவுனியா மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று திணைக்களம் தெரிவித்துள்ளது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் போது அந்தப் பகுதிகளில் தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும் என்றும், மின்னலால் ஏற்படும் ஆபத்துகளைக் குறைப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறும் வானிலை ஆய்வு மையம் பொதுமக்களுக்கு அறிவித்துள்ளது.
(Visited 1 times, 1 visits today)