சாக்லேட் பாய் ஹீரோவின் சோலியை முடித்து விட்ட ஹீரோக்கள்
 
																																		ஒரு காலத்தில் இந்த நடிகர் பயங்கர பிஸியாக நடித்து வந்தார். ஆனால் கடந்த சில வருடங்களாக இவர் பெரிய அளவில் படங்களில் நடிக்கவில்லை.
அப்படி நடித்தாலும் அந்த படங்கள் வரவேற்பு பெறாமலேயே போனது. ஆனால் தற்போது அந்த ஹீரோ மீண்டும் ரீஎன்ட்ரிக்கு தயாராகி விட்டார்.
பலமான கூட்டணியுடன் அவர் இணைய இருக்கிறார். நிச்சயம் இவருடைய செகண்ட் இன்னிங்ஸ் வெற்றிகரமாக இருக்கும் என்கின்றனர்.
ஆனால் இவருடைய கேரியர் இல்லாமல் போனதற்கு இப்போது முன்னணியில் இருக்கும் நாயகர்கள் தான் காரணம். ஏனென்றால் இந்த ஹீரோ எந்த கிசுகிசுவிலும் சிக்கியது கிடையாது.
அதேபோல் அனைத்து ஹீரோயின்களுக்கும் இவரை பிடிக்கும். ஒரு நிகழ்ச்சியில் கூட பல ஹீரோயின்கள் இவருடன் இணைந்து பெர்ஃபார்மன்ஸ் செய்திருந்தனர்.
இதெல்லாம் அப்போது இருந்த ஹீரோக்களுக்கு பொறாமையை உருவாக்கி விட்டது. அதனாலேயே சத்தம் இல்லாமல் இவருக்கு வரும் வாய்ப்புகளை எல்லாம் காலி செய்ய தொடங்கி இருக்கின்றனர்.
இப்படி தான் அவருடைய மார்க்கெட் குறைய தொடங்கியது. ஆனால் தற்போது அவர் மீண்டும் தன் இடத்தை பிடிக்க தயாராகி விட்டார்.
 
        



 
                         
                            
