ப்ரீ புக்கிங்கில் கெத்து காட்டும் அஜித்தின் விடாமுயற்சி

துணிவு படத்திற்கு பிறகு அஜித்தின் படம் வரவில்லை, எனவே விடாமுயற்சி ரிலீஸ் ஆக ரசிகர்கள் ஆவலாக காத்துக் கொண்டிருக்கின்றனர்.
லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் மகிழ் திருமேனி இயக்க, அனிருத் இசையமைப்பில் தயாராகியுள்ள இப்படத்தில் அஜித், த்ரிஷா, அர்ஜுன், ரெஜினா, ஆரவ் என பலர் நடித்துள்ளனர்.
டீஸர், டிரைலர், பாடல்கள் என ஏற்கெனவே வெளியாகிவிட்டது. விடாமுயற்சி படத்திற்கும் யுஏ சான்றிதழ் கிடைத்துள்ளது.
தமிழகத்தில் மட்டுமே 900 திரைகளுக்கு மேலாகவும், மொத்தமாக உலகம் முழுவதும் 3650 திரைகளுக்கு மேலாகவும் விடாமுயற்சி படம் ஒளிபரப்பாக உள்ளதாக கூறப்படுகிறது.
தற்போது தமிழகத்தில் ப்ரீ புக்கிங்கில் மட்டுமே விடாமுயற்சி திரைப்படம் ரூ. 20 லட்சத்திற்கு மேல் கலெக்ஷன் செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
(Visited 13 times, 1 visits today)