எல் சால்வடாரின் தலைநகரில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவு : வீதியில் திரண்ட மக்களால் பரபரப்பு!
எல் சால்வடாரின் தலைநகரில் 5.8 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அகாஜுட்லாவிலிருந்து கிழக்கே 5 மைல் (9 கிலோமீட்டர்) தொலைவில் 59 மைல் (95 கிலோமீட்டர்) ஆழத்தில் குறித்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.
இதனால் பீதியடைந்த மக்கள் குடியிருப்புகளை கைவிட்டு வீதிகளில் தஞ்சமடைந்ததாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட பாதிப்பு அல்லது சேத விபரங்கள் குறித்து உடனடி தகவல்கள் அறிவிக்கப்படவில்லை.
எல் சால்வடாரின் சுற்றுச்சூழல் அமைச்சகம், நிலநடுக்கம் மத்திய அமெரிக்க நாட்டின் பசிபிக் கடற்கரையில், சாண்டா அனாவின் தென்மேற்கே மையம் கொண்டிருந்ததாக முதற்கட்டமாக தெரிவித்துள்ளது.
(Visited 2 times, 2 visits today)