இலங்கை

இலங்கையில் தேங்காய் எண்ணெய் வரியால் சர்ச்சை நிலை

உள்நாட்டு தேங்காய் எண்ணெய் உற்பத்தியாளர்கள் மீது 18 வீத வரி விதிக்கப்படும் அதேவேளை, இறக்குமதியாளர்களிடம் 18 வீத வரி அறவீடு செய்யப்படுவதில்லை என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

உள்நாட்டு தேங்காய் எண்ணெய் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் அழைப்பாளர் புத்திக்க சில்வா இவ்வாறு குற்றச்சாட்டு ஒன்றினை முன்வைத்துள்ளார்.

இந்த நடவடிக்கையினால் உள்நாட்டு தேங்காய் எண்ணெய் உற்பத்தியாளர்கள் பாதிக்கப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டில் சுமார் ஒரு லட்சம் மில்லியன் கிலோ தேங்காய் எண்ணெய் உற்பத்தி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இறக்குமதி செய்யப்படும் தேங்காய் எண்ணெய் உரிய முறையில் விற்பனை செய்யப்படாத காரணத்தினால் வற் வரியை அறவீடு செய்யவும் முடியவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதனால் அரசாங்கத்திற்கு நட்டம் ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார்.

அனைத்து அரசியல் கட்சிகளும் பதவிக்கு வர முன்னதாக உள்நாட்டு கைத்தொழில்களை பாதுகாப்பதாக உறுதிமொழி வழங்கினாலும் ஆட்சிக்கு வந்ததன் பின்னர் அந்த உறுதிமொழிகள் வெறும் வார்த்தைகளுக்கு வரையறுக்கப்படுவதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

SR

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்