தனது திருமணம் குறித்து ஏ.ஆர் ரஹ்மான் கூறிய அதிர்ச்சி செய்தி… மீண்டும் பற்றிய நெருப்பு
சாய்ரா, தனது கணவர் மற்றும் இசை புயல் ஏ.ஆர். ரகுமானை பிரியவுள்ளதாக திடுக்கிடும் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
தமிழ் சினிமாவில் அண்மைக்காலமாக விவாகரத்து என்ற ஒன்று ஆட்டிப்படைத்து வரும் நிலையில், மற்றுமொரு நம்ப முடியாத செய்திதான் ஏ.ஆர். ரகுமானின் விவாகரத்து செய்தி.
இந்த நிலையில் சில வருடங்களுக்கு முன்பு ஒரு நேர்காணலில் பங்கேற்ற ரகுமான் தனது திருமணம் குறித்து பேசியிருந்தார்.
அப்போது இவர் பேசியதுதான் தற்போது வைரலாகி வருகின்றது.
இசை புயலுக்கு கடந்த 1995ல் தான் சாய்ராவுடன் திருமணம் நடந்து முடிந்தது. இருவருக்கும் நடந்த இந்த திருமணம் பெற்றோர்களால் நிச்சியக்கப்பட்ட திருமணமாகும்.
தனது திருமணம் குறித்து பேசுகையில்,
“திருமணத்தை பற்றிய யோசனை அப்போது எனக்கு இல்லை. எனக்கென்று ஒரு பெண்ணை தேடி செல்லவும் அப்போது தோணவில்லை. ஆகவே என் அம்மா பார்த்த பெண்ணை நான் திருமணம் செய்துகொண்டேன்” என்றார் அவர்.
“உண்மையைச் சொல்லவேண்டுமென்றால், எனக்கென மணப்பெண்ணைத் தேடிச் செல்ல எனக்கு நேரமில்லை. நான் ரங்கீலா, பம்பாய் போன்ற படங்களில் பிசியாக பணி செய்து கொண்டிருந்தேன். அப்போது ஒரு கட்டத்தில் எனக்கு திருமணம் செய்துகொள்ளலாம் என்று தோன்றியது. என் அம்மாவிடம் பெண் பார்க்க சொன்னேன். அப்படி நடந்தது தான் எங்கள் திருமணம்” என்றார் அவர்.
ஏ.ஆர்.ரஹ்மானின் மனைவி சாய்ரா பானுவின் வழக்கறிஞர்கள் இன்று அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். அவரது வழக்கறிஞர்,வந்தனா ஷா, அவர் சார்பில் ஆஜராகி வாதாடினார். இந்த தம்பதியினர் தங்கள் திருமண வாழ்க்கையில் கடந்த சில காலமாக உணர்ச்சிப்பூர்வமான சில சவால்களை எதிர்கொண்ட நிலையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்றார் அவர்.