பொழுதுபோக்கு

இந்திய சினிமாவின் ராஜாவுக்கு பிறந்தநாள்… முழு சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

சாதாரண நடிகராக வலம் வந்த நடிகர் பிரபாஸை ஒரே ஒரு படத்தின் மூலம் உலகறியச் ராஜமௌலி.

இவர் இயக்கிய பாகுபலி படத்தில் நடித்து மிகவும் பிரபலமான பிரபாஸ் இந்திய சினிமாவின் ராஜாவாக வலம் வருகின்றார்.

தொடர்ந்து வெளிவந்த பாகுபலி 2 உலகளவில் ரூ. 1,800 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. இதன்பின் சாஹோ, ராதே ஷ்யாம், ஆதிபுருஷ், சலார் ஆகிய படங்களில் நடித்தார்.

மேலும் தற்போது ராஜா சாப் எனும் படத்தில் நடித்து கொண்டு இருக்கிறார். அடுத்ததாக இயக்குனர் சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் உருவாகும் ஸ்பிரிட் படத்தில் நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்று நடிகர் பிரபாஸின் 45வது பிறந்தநாள். ரசிகர்களும் திரையுலக நட்சத்திரங்களும் தங்களது வாழ்த்துக்களை அவருக்கு தெரிவித்து வருகிறார்கள்.

இந்த நிலையில், அவருடைய சொத்து மதிப்பு குறித்து விவரம் வெளியாகியுள்ளது, அதை பற்றி பார்க்கலாம் வாங்க. நடிகர் பிரபாஸின் முழு சொத்து மதிப்பு ரூ. 260 கோடி இருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் இவருக்கு சொந்தமான, ரூ. 60 கோடி மதிப்புள்ள பிரமாண்ட வீடு ஒன்று ஹைதராபாத்தில் உள்ளது.

இவர் ஒரு படத்தில் கதாநாயகனாக நடிக்க ரூ. 100 கோடி முதல் ரூ. 200 கோடி வரை சம்பளம் வாங்கி வருகிறார் என சொல்லப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

(Visited 2 times, 1 visits today)

MP

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்