பொழுதுபோக்கு

கோட் படைத்துள்ள புதிய சாதனை.. கேக் வெட்டி கொண்டாடிய தளபதி

இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து கடந்த செப்டம்பர் 5ஆம் தேதி ரிலீஸான திரைப்படம், தி கோட். இது விஜய்யின் 68ஆவது படமாகும். இப்படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக மீனாட்சி செளத்ரி மற்றும் சினேகா ஆகியோர் நடித்திருந்தனர்.

இந்தப் படத்தில் பிரசாத், பிரபுதேவா, மோகன், லைலா, அஜ்மல், வைபவ், பிரேம்ஜி அமரன், யுகேந்திரன் ஆகியோரும் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இந்தப் படத்தின் மூலம் நடிகர் விஜய்யின் படத்துக்கு, பல ஆண்டுகளுக்குப் பின், யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். இப்படம் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் ரிலீஸாகியிருக்கிறது.

பெரிய படங்கள் எதுவும் வெளியாகாத நிலையில் தொடர்ச்சியாக வசூல் வேட்டை நிகழ்த்தி வந்த இந்த படம் தற்போது வரை ரூ. 455 கோடி வசூலை ஈட்டியுள்ளது.

இதனை தி கோட் படத்தின் கிரியேட்டிவ் புரொடியூசர் அர்ச்சனா கல்பாத்தி தனது எக்ஸ் தளத்தில் உறுதி செய்திருந்தார்.

இந்த நிலையில் OTT-யும் சக்கை போடு போடுகிறது கோட் படம். அதிகம் பார்க்கப்பட்ட படமாக உள்ளது. இந்த படத்திற்கு கலவையான விமர்சனம் வந்தாலும், 3 மணி நேரம் போனதே தெரியவில்லை என்று தான் பெரும்பாலானோர் கூறுகின்றனர்.

See also  அப்போலோ மருத்துவமனைக்கு ரஜினி குடும்பம் பில் கட்டவில்லையா?

தற்போது, கோட் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளது. தமிழ்நாட்டில் நடிகர் விஜய் நடித்த ‘தி கோட்’ திரைப்படமானது, ரூ.100 கோடி வரை விநியோகஸ்தர்களுக்கு ஷேர் தொகையை ஈட்டி தந்து சாதனைப் படைத்துள்ளது.

அனைவருக்குமே ஒரு படம் லாபமாக அமைவது அரிது. கோட் பட தயாரிப்பாளர் கல்பாத்தியுடன் தளபதி விஜய் நேற்று கேக் வெட்டி கொண்டாடினார். அந்த நியூ லுக் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

(Visited 2 times, 2 visits today)
Avatar

MP

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்

You cannot copy content of this page

Skip to content