இலங்கை பொதுத் தேர்தல்: தபால் மூல வாக்காளர்களுக்கான முக்கிய அறிவிப்பு
எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கான அஞ்சல் மூல வாக்களிப்பு நடத்தப்படும் திகதிகளைத் தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
அதன்படி, மாவட்ட செயலக வளாகத்தில் உள்ள அனைத்து அலுவலகங்கள், தேர்தல் அலுவலகங்கள், காவல் நிலையங்கள் மற்றும் காவல்துறையுடன் தொடர்புடைய காரியாலயங்களைச் சேர்ந்தவர்களுக்கு அஞ்சல் வாக்களிக்க எதிர்வரும் 30ஆம் திகதி மற்றும் நவம்பர் 4ஆம் திகதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
அத்துடன், பிற அரச நிறுவனங்கள் மற்றும் இராணுவ முகாம்களைச் சேர்ந்தவர்கள் நவம்பர் மாதம் முதலாம் மற்றும் நான்காம் திகதிகளில் அஞ்சல் வாக்கினைப் பதிவு செய்ய முடியும். .
மேற்குறிப்பிட்ட திகதிகளில் தபால் வாக்குகளை குறிக்க முடியாதவர்கள் நவம்பர் 07 மற்றும் 08 ஆம் திகதிகளில் பதிவு செய்யலாம்.
(Visited 4 times, 1 visits today)