இலங்கையின் புதிய தலைமுறையினருக்கு வழிவிடும் முன்னாள் அமைச்சர்கள் – பத்துல வெளியிட்ட அறிவிப்பு!
எதிர்வரும் பாராளுமன்ற பொதுத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என முன்னாள் போக்குவரத்து நெடுஞ்சாலைகள் மற்றும் ஊடகத்துறை அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன இன்று (04) தெரிவித்தார்.
இருபது வருடங்களுக்கு மேலாக ஹோமாகம தொகுதியை பாராளுமன்றத்தில் பிரதிநிதித்துவப்படுத்தி பாராளுமன்ற உறுப்பினர், பிரதியமைச்சர், அமைச்சரவை அமைச்சர் என பல பதவிகளை வகித்து தன்னால் இயன்றவரை மக்களுக்கு சேவையாற்றியதாக அவர் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்துவதற்கு மக்கள் பிரதிநிதிகள் இன்றி பல வருடங்களாக அநாதரவாக இருந்த ஹோமாகம தொகுதி மக்களுக்கு இந்த நகரை அறிவு மையமாக மாற்றுவதற்கு தன்னால் இயன்ற அனைத்தையும் செய்துள்ளதாக பந்துல குணவர்தன தெரிவித்தார்.
அடுத்த சில வருடங்களில் மீண்டும் டாக்டர் பட்டம் படிக்க உள்ளதாகவும், படம் தயாரிக்கவும் திட்டமிட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.