பொழுதுபோக்கு

தளபதி 69 – நடிகை பிரியாமணி, நரேன் கூட்டணி

நடிகர் விஜய்யின் தளபதி 69 படத்தை இயக்குநர் ஹெச் வினோத் இயக்கவுள்ள நிலையில், மீண்டும் தளபதியுடன் இணைந்துள்ளார் இசையமைப்பாளர் அனிருத். கடந்த சில வாரங்களுக்கு முன்பு இந்தப் படத்தின் அறிவிப்பை படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தனர்.

இந்தப் படத்தின் நடிகர்கள் மற்றும் நடிகைகளை கடந்த இரு தினங்களாக கேவிஎன் நிறுவனம் தொடர்ந்து அறிவித்து வருகிறது.

நடிகர் விஜய்யின் கோட் படம் கடந்த மாதம் 5ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாகி ஏராளமான ரசிகர்களை கவர்ந்துள்ளது. படத்திற்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்த போதிலும் சர்வதேச அளவில் 400 கோடிகளை தாண்டி இந்தப் படத்தின் வசூல் காணப்பட்டது.

இந்நிலையில் நேற்று முன்தினம் முதல் இந்தப் படத்தின் நடிகர்கள், நடிகைகள் குறித்த அடுத்தடுதத அறிவிப்புகளை கேவிஎன் நிறுவனம் அடுத்தடுத்து வெளியிட்டு வருகிறது. முதலில் படத்தின் வில்லன் கேரக்டரில் நடிக்கவுள்ள பாலிவுட் நடிகர் பாபி தியோல் குறித்த அறிவிப்பு வெளியானது.

தொடர்ந்து படத்தில் நடிக்கவுள்ள நாயகிகள் பூஜா ஹெக்டே மற்றும் மமிதா பைஜு ஆகியோரின் போஸ்டர்கள் வெளியிடப்பட்டு, அவர்கள் தளபதி 69 படத்தில் இணையவுள்ளது குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

See also  குக் வித் கோமாளிக்கு பதிலாக விஜய் டிவி தொடங்கும் புது குக்கிங் ஷோ

இதையடுத்து இன்று காலையில் படத்தில் இணையும் இயக்குநர் மற்றும் நடிகர் கௌதம் மேனன் குறித்தும் படக்குழு போஸ்டருடன் அறிவித்தது.

இந்நிலையில் தற்போது படத்தின் மற்றொரு இணைப்பாக நடிகை பிரியாமணி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தளபதி 69 பேமிலியில் நடிகை பிரியாமணி இணைந்துள்ளதாக படக்குழுவினர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

இதேவேளை தற்போது, விக்ரம் படத்தில் பட்டையை கிளப்பிய நரேனும் தளபதி 69இல் இணைந்துள்ளார்.

(Visited 2 times, 2 visits today)
Avatar

MP

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்

You cannot copy content of this page

Skip to content