இலங்கை: தனது சட்டத் தொழிலுக்குத் திரும்பிய முன்னாள் வெளிவிவகார அமைச்சர்
அண்மையில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தைத் தொடர்ந்து முன்னாள் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தனது சட்டத் தொழிலுக்குத் திரும்பியுள்ளார்.
அலி சப்ரி தனது சட்டத் தொழிலைச் சேர்ந்த குழுவுடன் சமூக ஊடகங்களில் ஒரு புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார், “நான் சேர்ந்த இடத்திற்குத் திரும்புவது மகிழ்ச்சியாக இருக்கிறது” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் முன்னாள் அமைச்சர், எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தான் போட்டியிடப் போவதில்லை என உறுதிப்படுத்தியுள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) கட்சியின் முக்கிய உறுப்பினரான அலி சப்ரி, தேசியப்பட்டியல் ஊடாக பாராளுமன்றத்திற்கு வந்துள்ளார்.
அவர் கோட்டாபய ராஜபக்ச மற்றும் ரணில் விக்ரமசிங்க ஆகிய இருவரின் முன்னாள் அரசாங்கங்களின் கீழ் நீதி மற்றும் வெளியுறவு அமைச்சராக பணியாற்றினார்.
(Visited 2 times, 1 visits today)