பொழுதுபோக்கு

பிக்பாஸ் சீசன் 8… அந்த 15 போட்டியாளர்கள் யார்?

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 8-வது சீசன் அடுத்த மாதம் தொடங்க உள்ளது. இதுவரை நடந்து முடிந்த 7 சீசன்களை தொகுத்து வழங்கிய நடிகர் கமல்ஹாசன், இந்த முறை சினிமா பணிகள் காரணமாக விலகியதால், அவருக்கு பதிலாக மக்கள் செல்வன் விஜய் சேதுபதி பிக்பாஸ் நிகழ்ச்சியின் புது தொகுப்பாளராக களமிறங்கி உள்ளார்.

இந்த பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொள்ளப்போவது யார் என்கிற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நிலவி வருகிறது. அதன்படி அந்நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ள 15 போட்டியாளர்கள் பற்றிய விவரம் கசிந்துள்ளது.

அதன்படி மொத்தம் 9 ஆண் போட்டியாளர்களும், 6 பெண் போட்டியாளர்களும் இந்த பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் கலந்துகொள்ள உள்ளதாக கூறப்படுகிறது.

பிரபல தயாரிப்பாளரான ரவீந்தர் சந்திரசேகர், தொகுப்பாளர் தீபக், சீரியல் நடிகர் வினோத் ஆகியோரது பெயர்களும் இந்த பட்டியலில் இடம்பிடித்து உள்ளன. மேலும் பாரதி கண்ணம்மா சீரியலில் நாயகனாக நடித்த அருண், சீரியல் நடிகர் அர்னவ், நகைச்சுவை நடிகர் செந்திலின் பெயரும் அடிபடுகிறது. இறுதியாக பிரபல வில்லன் நடிகர் ரியாஸ் கான், நடிகரும் இயக்குனருமான ரஞ்சித், தொகுப்பாளரும் நடிகருமான ஜெகன் ஆகியோரது பெயர்களும் லீக்கான லிஸ்ட்டில் இடம்பெற்று உள்ளன.

பெண் போட்டியாளர்களை பொறுத்தவரை செல்லம்மா சீரியலில் நாயகியாக நடித்த அன்ஷிதா பிக்பாஸில் கலந்துகொள்ள உள்ளாராம். இவரோடு ஈரமான ரோஜாவே சீரியல் நாயகி பவித்ரா ஜனனி, பாரதி கண்ணம்மா சீரியல் வில்லை ஃபரீனா, சினிமாவில் ஹீரோயினாக நடித்து வரும் நடிகை தர்ஷா குப்தா, மகாராஜா படத்தில் விஜய் சேதுபதி மகளாக நடித்த சஞ்சிதாவும் பிக்பாஸ் வீட்டுக்குள் செல்ல உள்ளாராம். இவர்களுடன் முந்தைய பிக்பாஸ் சீசன்களை சேர்ந்த போட்டியாளர்கள் சிலரும் இந்தமுறை கலந்துகொள்ள உள்ளதாக கூறப்படுகிறது.

(Visited 1 times, 1 visits today)
Avatar

MP

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்

You cannot copy content of this page

Skip to content