பொழுதுபோக்கு

துணிந்து மோதிய டிமாண்டி காலனி – 2… முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?

இயக்குனர் அஜய் ஞானமுத்துவின் அறிமுக இயக்கத்தில் 2015ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் டிமாண்டி காலனி. இப்படத்தில் அருள்நிதி, ரமேஷ் திலக் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

அறிமுக படமே இயக்குனர் அஜய் ஞானமுத்துவிற்கு மாபெரும் வெற்றி திரைப்படமாக அமைந்தது. இதை தொடர்ந்து 9 ஆண்டுகளுக்கு பின் டிமாண்டி காலனி 2 திரைப்படம் வெளிவந்துள்ளது.

பெரிதும் எதிர்பார்ப்பில் நேற்று திரையரங்கில் வெளியான இப்படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

எவ்வித தயக்கமும் இன்றி டொப் ஹீரோ விக்ரமின் தங்கலான் படத்துடன் மோதியது.

அஜய் ஞானமுத்துவிற்கு இப்படம் நல்ல கம் பேக்காக அமைந்துள்ளது என்றும், அருள்நிதி மற்றும் பிரியா பவானி ஷங்கர் இருவரும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர் என்றும் ரசிகர்களால் கூறப்பட்டது.

இந்த நிலையில், டிமாண்டி காலனி திரைப்படம் முதல் நாள் உலகளவில் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் உலகளவில் ரூ. 5 கோடி வரை வசூல் செய்துள்ளது.

(Visited 1 times, 1 visits today)
Avatar

MP

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்

You cannot copy content of this page

Skip to content