பொழுதுபோக்கு

விஜயின் லியோ படத்தைப் பற்றி முதன்முறையாக பேசிய அட்லீ… என்ன சொன்னாரு தெரியுமா?

ராஜா ராணி படத்தின் மூலம் தமிழில் என்ட்ரி கொடுத்தவர் இயக்குனர் அட்லி. முதல் படத்திலேயே மிகப்பெரிய அளவிலான வெற்றியை கொடுத்திருந்தார் அட்லீ. இந்த படத்தின் வெற்றி அடுத்தடுத்து தெறி, மெர்சல், பிகில் என விஜய்யின் படங்களை இயக்கும் வாய்ப்பை அட்லீக்கு பெற்றுக் கொடுத்தது.

இந்த படங்களை அடுத்துடுத்து ஹாட்ரிக் வெற்றிகளாக கொடுத்திருந்தார். தொடர்ந்து பாலிவுட்டில் ஷாருக்கானை இயக்கும் வாய்ப்பும் அட்லிக்கு கிடைத்தது. அதையும் சிறப்பாக பயன்படுத்திய அவர், ஜவான் படத்தை ஆயிரம் கோடி கிளப்பில் இணைத்து மாஸ் காட்டினார். இந்நிலையில் அடுத்ததாக சல்மான் கான் மற்றும் கமல்ஹாசனை இணைத்து அட்லி படமியக்க உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

முன்னதாக தெலுங்கில் அல்லு அர்ஜுனை லீட் கேரக்டரில் வைத்து அட்லி படம் இயக்க உள்ளதாக கூறப்பட்டது. இந்நிலையில் தற்போது அட்லி அளித்துள்ள பேட்டி ஒன்றில் விஜய்யின் லியோ படம் குறித்த கேள்விக்கு அவர் பதிலளித்திருந்தார்.

இந்த படத்தில் விஜய்யின் நடிப்பு தனக்கு மிகப் பெரிய அளவில் பிடித்திருந்ததாகவும் விஜய்யை லோகேஷ் கனகராஜ் வேற லெவலில் காட்டி இருந்ததாகவும் அவரது ஆவேச அவதாரத்தை வெளிப்படுத்தியிருந்ததாகவும் குறிப்பிட்டார்.

மேலும் லியோ படத்தில் காபி ஷாப் காட்சியை தனக்கு மிகவும் பிடித்தமானது என்றும் அதில் அப்பாவாக தன்னுடைய அழகான நடிப்பை விஜய் வெளிப்படுத்தி இருந்ததாகவும் அட்லி குறிப்பிட்டுள்ளார்.

(Visited 2 times, 1 visits today)
Avatar

MP

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்

You cannot copy content of this page

Skip to content