பொழுதுபோக்கு

ஐஸ்வர்யாராயுடன் நடிக்க ஆசைப்பட்ட விஜய்… கடைசியா கிடைத்தது யார் தெரியுமா?

விஜய் நடிக்க ஆசைப்பட்ட நடிகை பற்றி பிரபல பத்திரிக்கையாளர் சவிதா ஜோசப் சொல்லி இருக்கிறார்.

நடிகர் விஜய் ரொம்பவே நடிக்க ஆசைப்பட்ட நடிகை ஐஸ்வர்யா ராய் தான். ஆனால் தமிழில் , அப்போதைய காலகட்டத்தில் அவருடன் இணைந்து நடித்தது பிரசாந்த் மற்றும் அப்பாஸ் தான்.

அதன் பின்னர் பல வருடங்களாக ஐஸ்வர்யா ராய் தமிழ் சினிமா பக்கம் தலை காட்டவில்லை. அதன் பின்னர் அவரை மீண்டும் தமிழ் சினிமாவிற்குள் கொண்டு வந்தது இயக்குனர் சங்கர் தான். சூப்பர் ஸ்டார் ரஜினியின் நீண்ட கால ஆசையை எந்திரன் படம் மூலம் தீர்த்து வைத்தார்.

ஐஸ்வர்யா ராயுடன் எப்படியாவது நடித்து விட வேண்டும் என விஜய்க்கும் ஆசை இருந்திருக்கிறது. அவர் நடித்த தமிழன் படத்தில் ஐஸ்வர்யாவை நடிக்க வைக்க பேச்சுவார்த்தையும் நடைபெற்று இருக்கிறது.

விஜய் இடம் ஐஸ்வர்யா ராயை ஜோடியாக நடிக்க வைக்கிறேன் என்று சொல்லி தான் சம்மதமே வாங்கி இருக்கிறார்.

ஆனால் ஐஸ்வர்யா ராய் நான் விஜய் உடன் நடிக்க மாட்டேன் என சொல்லிவிட்டாராம். அதற்கு முக்கிய காரணம் விஜய் தன்னைவிட சின்னப் பையனாக ஸ்கிரீனில் தெரிவார் என்பது தான்.

அதன் பின்னர் ஒரு வழியாக விஜய் இடம் பேசி அந்த உலக அழகி இல்லனா என்ன, சமீபத்தில் வெற்றி பெற்ற உலக அழகியை நடிக்க வைக்கிறேன் என்று சொல்லி பிரியங்கா சோப்ராவை அந்த படத்தில் நடிக்க வைத்திருக்கிறார்கள்.

MP

About Author

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்
error: Content is protected !!