ஆஸ்திரேலியா செய்தி

ஆஸ்திரேலியாவின் பணக்கார பெண் – மிரள வைக்கும் சொத்து விபரம்

ஆஸ்திரேலியாவின் பணக்கார பெண் ஜினா ரைன்ஹார்ட்டின் சொத்து மதிப்பு 40 பில்லியன் டொலருக்கும் அதிகமாக உள்ளது.

அதன்படி, 40 பில்லியன் டொலர்களுக்கு மேல் சொத்து மதிப்புள்ள முதல் ஆஸ்திரேலியர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

சுரங்க அதிபர் ஜினா ரைன்ஹார்ட் நீண்ட காலமாக ஆஸ்திரேலியாவின் பணக்காரப் பெண்மணியாக தனது ஆதிக்கத்தைத் தக்க வைத்துக் கொண்டார்.

ஆஸ்திரேலிய நிதி மறுஆய்வு வெளியிட்டுள்ள ஆஸ்திரேலியாவின் பணக்காரர்கள் பட்டியலில் ஜினா ரைன்ஹார்ட் தொடர்ந்து ஐந்தாவது ஆண்டாக முதலிடம் பிடித்துள்ளார்.

2023 ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் அவரது சொத்து மேலும் 3.2 பில்லியன் டாலர்கள் அதிகரித்துள்ளது என்று கூறப்படுகிறது.

உலக பணக்காரர்கள் பட்டியலில் 70 வயதான ஜினா ரைன்ஹார்ட்டும் இடம்பெற்றுள்ளார்.

ஆஸ்திரேலியாவின் 200 பணக்காரர்களின் மதிப்பு 625 பில்லியன் டொலர்கள் என்றும், கடந்த ஆண்டில் அவர்களது சொத்து மதிப்பு 11 சதவீதம் அதிகரித்துள்ளது என்றும் தெரியவந்துள்ளது.

ஆஸ்திரேலியாவின் முதல் 10 பணக்காரர்களில் 5 பேர் சுரங்கத் தொழிலில் ஈடுபட்டுள்ளனர் என்பது மற்றொரு சிறப்பம்சமாகும்.

SR

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி