விஜய் தோற்றுப்போயிடுவார் போல இருக்கே… சின்னத்திரை தளபதி வெளியிட்ட வீடியோ
விஜய் டிவியில் ஒளிபரப்பாகிய பாண்டியன் ஸ்டோர்ஸ் முதலாம் பாகத்தில் கதிர் என்ற கதாப்பாத்திரத்தில் நடிகர் குமரன் நடித்திருந்தார்.
இந்த நிலையில் இவருடைய நடை, உடைட, பாவனை அனைத்தும் இளைய தளபதி விஜய் போன்று உள்ளதாகவும், இவரை சின்னத்திரை தளபதி என அவரது ரசிகர்கள் கூறிவருகின்றனர்.
எனினும், குமரன் முன்பு கொடுத்திருந்த பேட்டியில் ரசிகர்கள் சிலர் தன்னை சின்னத்திரை தளபதி என்று கூறுகிறார்கள். தயவு செய்து அப்படி அழைக்காதீர்கள், அதனால் நான் தான் திட்டு வாங்குவேன் என தெரிவித்துள்ளார்.
ஆனால், குமரனுக்கு என்று சமூகவலைத்தளங்களில் தனி ரசிகர் கூட்டமே இருக்கின்றது. எனவே அவரை அப்படி அழைப்பதில் எந்த தவறும் இல்லை என்பதே நெட்டிசன்கள் கருத்து.
அந்த வகையில், தற்போது விஜய்யின் பாடல் ஒன்றுக்கு விஜய் போலவே நடனம் ஆடி வெளியிட்ட வீடியோ வைரலாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
https://youtube.com/shorts/Z_tBKPJ8eEw?feature=share